மானாவரி மேம்பாட்டு கிராம கால்நடை மருத்துவர் திருமதி. Dr. பிரபா அவர்கள் கலந்து கொண்டு மாடு, ஆடு மற்றும் கோழிகளில் ஏற்படும் நோய் மேலாண்மை முறைகள், கோமாரி தடுப்பூசியின் முக்கியத்துவம், கால்நடை கொட்டகை மேலாண்மை முறைகள் மற்றும் தாது உப்பு பயன்படுத்துவதன் முக்கியத்துவம் ஆகியன குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
பாலக்கோடு வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் திரு.செல்வம் வேளாண் உதவி அலுவலர் அவர்கள் கலந்து கொண்டு மானாவரி பயிர்களான இராகி, சாமை, திணை, குதிரைவாலி ஆகிய தானியங்களை குழு உறுப்பினர்கள் மூலம் மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் வழிமுறைகள் மற்றும் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம் குறித்த முழுத் தகவல்களை எடுத்துகூறி அத்திட்டத்தின் மூலம் கடன்பெறும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
அட்மா திட்ட வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் மானாவரி நிலங்களுக்கு பயன்படுத்தும் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் வழிமுறைகளை கூறி செயல்விளக்கம் விவசாயிகளின் முன்னிலையில் செய்து காட்டினார்.
உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் திரு. கிருஸ்ணமூர்த்தி மற்றும் திருமதி. தமிழ்செல்வி அவர்கள் மானாவரி சாகுபடி நிலங்களில் ஏற்படும் களைச்செடிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். இப்பயிற்சியில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
.gif)

