தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கிராமம் அருள்மிகு ஊர் மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றதுடன் நடைபெற்று காப்பு கட்டுதல் முளைப்பயிறு இடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பின்னர் நேற்று புதிதாக செய்யப்பட்டுள்ள மூல விக்கிரகம் ஊர்வலம், முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை, துர்கா லட்சுமி சரஸ்வதி பூஜை, தீபாராதனை, வேத உபசாரம் நடைபெற்றது.
பின்னர் எட்டுக்குழி அருள்மிகு ஊர் மாரியம்மன் கோவில் கலசத்திற்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரானது கோவில் கலசத்திற்கு தெளிக்கப்பட்டது. பின்னர் ஊர் மாரியம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி கலந்து கொண்டார். ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தினர். அப்பகுதியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு மாரியம்மனை தரிசித்து சென்றனர்.

