இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் வட்டார இணைச் செயலாளர், தோழர். சிவா தலைமை தாங்கினார். சிறப்புரை தோழர். கோபிநாத் மக்கள் அதிகாரம் மாநில இணைச் செயலாளர், அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில் 2024-ல் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் நாட்டை ஒரு கலவர பூமியாக மாற்றி, RSS -யை சட்டபூர்வ குண்டர் படையாக உருவாக்கும் நோக்கில் BJP செயல்படுகிறது.
அனைத்து பொதுதுறைகளையும் கார்ப்பரேட்டுக்கு விற்றுவிட்டு, அடியாள் படையை நிறுவ மட்டும் ஆள் சேர்ப்பது என்பது RSS-ன் நீண்ட கனவான அகண்ட பாரதத்தை நிறுவிக்கொள்ள ராணுவத்தை பயன்படுத்துகிறது. குறிப்பாக அனைத்து அரசு துறைகளிலும் RSS ஆட்களை உயர் அதிகாரிகளாக நியமித்திருக்கிறது. ராணுவத்திலும் அதேபோல் RSS நபர்களை நியமித்து கொண்டிருக்கிறது. என்பதை விரிவாக அம்பலபடுத்தி பேசினார். இறுதியாக தோழர்.மாரியப்பன் நன்றியுரை ஆற்றினார்.
.gif)

