Type Here to Get Search Results !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 வது மாநாடு.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு முன்னதாக நிர்வாகக் குழு உறுப்பினர் புள்ளாரு  கொடியேற்றினார். அஞ்சலி தீர்மானத்தினை வட்டார துணை செயலாளர் சாமிநாதன் வாசித்தார். வட்டார துணைச்செயலாளர் குழந்தைவேலு வரவேற்பு உரை நிகழ்த்தினார்.

மாவட்ட துணை செயலாளர் கோபால் மற்றும் தமிழ்குமரன் வாழ்த்துரை வழங்கினார். வட்டார செயலாளர் பெருமாள் வேலை அறிக்கையை வாசித்தார். வரவு செலவு திட்டம் குறித்து பொருளாளர் முருகன் வாசித்தார். 

நிறைவு உரையை மாவட்ட செயலாளர் தேவராஜன் வாசித்தார். நன்றி உரையை நடிகர் சிங்காரவேலு மாநில குழு உறுப்பினர் தெரிவித்தார். இறுதியாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நஞ்சப்பன் சிறப்புரையாற்றினார். 100 நாள் வேலையை திட்டத்தினை இரு நூறு நாளாக மாற்ற வேண்டும்.

100 நாள் வேலை ஆட்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும் எனவும் காவிரி உபரி நீரை அனைத்து ஏழைகளுக்கும் நிரப்ப வேண்டும் என போன்ற எட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies