Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட ஓய்வூதியர்கள் கவனத்திற்கு.

ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை/ மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும். 

கொரோனா பெறும் தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ம் ஆண்டிற்கான நேர்காணல் நடைபெறாத நிலையில் தற்போது அரசாணை நிலை எண்.136 நிதி (ஓய்வூதியம்)த் துறை நாள் 20-05-2022 ன் படி ஓய்வூதியர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒருமுறையை பின்பற்றி இவ்வாண்டிற்கான நேர்காணல் (2022-23) செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  1. ஜீவன் பிரமான் இணைய தள மின்னனு வாழ்நாள் சான்றிதழ் தமிழ் நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும். இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணைய தளம் மூலமாக ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
    1. இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ70/- கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். 
    2. அரசு இ-சேவா மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர்/ குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். 
    3. ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி (Biometric Device) பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் அளிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்

  1. ஆதார் எண்
  2. P.P.O.No. 
  3. வங்கி கணக்கு எண்
  4. ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்.

வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் அனுப்புதல் ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை (Life Certificate) (www.tn.gov.in/karuvoolami /) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட ஏதேனும் ஒரு அலுவலரிடம் கையொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேகாணல் செய்யலாம்.

ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) வட்டாட்சியர் /துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள்: மேற்கண்ட இணையதள முகவரியிலிருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவர் / மாஜிஸ்ரேட், நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்வுநாள் சான்று (Life Certificate) பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பலாம் மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணலில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் தொடர்புடைய மாவட்டக்கருவூல அலுவலர் / மண்டல இணை இயக்குர் அல்லது சென்னை கருவூல் கணக்குத்துறை ஆணையரகத்திற்கு தொலைபேசி /மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம் கருவூல கணக்குத்துறை ஆணையரகம், பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை, 3வது தளம், நந்தனம். சென்னை - 600035, மின்னஞ்சல் dta.tn@nic.in தொலைபேசி எண் 044-24321761, 044-24321764, 044-24321765 ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை/ மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும். 

கொரோனா பெறும் தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ம் ஆண்டிற்கான நேர்காணல் நடைபெறாத நிலையில் தற்போது அரசாணை நிலை எண்.136 நிதி (ஓய்வூதியம்)த் துறை நாள் 20-05-2022 ன் படி ஓய்வூதியர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒருமுறையை பின்பற்றி இவ்வாண்டிற்கான (2022-23) நேர்காணல் செய்ய கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும்மாறு கோட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies