Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் வரும் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

கோப்பு படம்.
தருமபுரி மாவட்டத்தில் நேஷனல் லோக் அதாலத் தருமபுரி மாவட்டத்தில் வரும் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி V.திலகம் அவர்களின் ஒப்புதலுடன் தருமபுரி மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான (பொறுப்பு) திரு.டி.முனுசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும் வழிகாட்டுதலின்படியும் வரும் 26ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதுபோன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட நான்கு தாலுகா நீதிமன்ற வளாகத்திலும் நேஷனல் லோக் அதாலத் நடக்க உள்ளது. 

தருமபுரி மாவட்டத்தில் வரும் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த லோக் அதாலத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு வங்கி வாராக்கடன் வழக்கு நில ஆர்ஜித வழக்கு, உரிமையியல் வழக்கு குடும்ப பிரச்சனை வழக்கு தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு, சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணப்படவுள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ள கூடிய, மேற்கண்ட பிரிவு வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies