இதில் விருதுநகர் VHNSN கல்லூரியைச் சார்ந்த ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ராமநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இவர் தனது உரையில் இன்றைய காலகட்டத்தில் சபால்ட்டன் ஸ்டடீஸ் என்ற இலக்கிய அமைப்பு எவ்வாறு கருத்தாழம் கொள்ளப்படுகிறது மற்றும் நடைமுறை வாழ்வில் இதற்கான முக்கியத்துவம் எவ்வாறு தரப்படுகிறது என்பதை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
முன்னதாக பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார்.
தொடர்ந்து ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியரும் துறைத் தலைவருமான முனைவர் சி கோவிந்தராஜ் அவர்கள் விழா துவக்க உரையாற்றினார். உனக்காக நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவன் பாரதமூர்த்தி வரவேற்றார்.
செல்வன் செந்தமிழன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இறுதியாக இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவி செல்வி. ஜெசிகா நன்றியுரையாற்றினார்.