![]() |
மாதிரி படம். |
தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ வெங்கடேஷ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நட்டக்கானம்பட்டி கூட்ரோடு குட்டச்சந்து புளியந்தோப்பில், சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று 4 பேரை மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் நட்டக்கானம்பட்டியை சேர்ந்த பெருமாள் (35), தன்ராஜ் (36), ராஜ் (39), சுந்தரபாண்டியன் (39) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் 4 பைக் மற்றும் ரூ. 9000 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.