தர்மபுரி மாவட்டத்தில் தற்போது பலா பழ சீசன் துவங்யுள்ளது. பண்ருட்டி, ஜவ்வாதுமலை, ஏலகிரி மற்றும் வத்தல்மலையில் அதிக அளவில் பலா மரங்கள் உள்ளது. இங்கு விளையும் பலாப்பழங்கள் மிகுந்த சுவை கொண்டதால், பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது சீசன் துவங்கி உள்ளதால் பெண்ணாகரம், தர்மபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதியில் பலா பழங்கள் விற்பனைக்கு அதிகம் கொண்டு வரப் பட்டுள்ளது. பென்னாகரத்தில் பேருந்து நிலையம் அருகில் மற்றும் சாலையோரங்களில், பண்ருட்டியில் இருந்து கொண்டுவரப்பட்ட பலாப்பழங்களை குவித்து, விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு கிலோ ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது. தவிர, சில்லரை விற்பனையாகவும் வியாபாரிகள் செய்து வருகின்றனர்.

