தற்போது, 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வந்தனர். பன்னி குழி கிராம பகுதிகளிலும், வனப் பகுதியை ஒட்டியிருக்கும் இடங்களிலும் இந்த ஆடுகளை மேய்ப்பது இவா்களின் வழக்கம். நேற்று வழக்கம் போல ஆடுகளை மேய்த்து மாலையில் பட்டியில் ஆடுகளை அடைத்தனர். அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது இடி, மின்னல் தாக்கியதில் ராஜிக்கு சொந்தமான 25 ஆடுகள் கருகி உயிரிழந்தன. மேலும் பட்டியில் இருந்த குடிசையும் தீப்பற்றி எரிந்தது. சுமார் 25 ஆடுகள் ஓடிச்சென்று உயிர்தப்பின.
இந்த சம்பவத்தால் வேதனை அடைந்துள்ள விவசாயி ராஜியின் குடும்பத்தார், 'இடி, மின்னல் தாக்குதலில் ஆடுகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசு சார்பில் எங்களுக்கு நிவாரணம் வழங்கி உதவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளனர்.

