அங்கு இரண்டு பவுன் தோடு மற்றும் தங்க நகைகள் வாங்கிக்கொண்டு பஸ்ஸில் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது தர்மபுரியிலிருந்து பாப்பாரப்பட்டிக்கு டவுன் பஸ்ஸில் வரும்போது கலாவின் கைப்பையை நோட்டமிட்ட இரண்டு பெண்கள் தங்க நகையை நைசாக எடுத்துக்கொண்டனர். பெண்கள் மீது சந்தேகப்பட்ட சிவா கலாவிடம் பையில் நகை இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லியுள்ளார். பையில் நகை இருக்கிறதா என்று பார்த்த போது காணவில்லை என்பது தெரியவந்தது. உடனே கலா கூச்சலிட்டதும் வேலம்பட்டி நிறுத்தம் அருகே டவுன் பஸ் நிறுத்தப்பட்டது அப்பொழுது தங்க நகையுடன் இரண்டு பெண்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி தப்பி ஒடமுயன்றனர்.
அதில் ஒரு பெண்ணை பஸ்ஸிலிருந்தவர்கள் பிடித்துவிட்டனர். மற்றொரு பெண் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட பெண்ணை பாப்பாரப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து நகையை போலீசார் மீட்டனர். அவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள கட்டமடுவு என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவரின் மனைவியான பாரதி(வயது 32) என்பதும் தப்பியோடிய பெண்ணின் பெயர் மீனா என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஓடும் பஸ்ஸில் நகை திருடி கையும் களவுமாக பிடிபட்ட பாரதியை பாப்பாரப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு பெண்ணான மீனாவை தேடிவருகின்றனர்.

