தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் பாளையம் மற்றும் சிங்காரப்பேட்டயில் இயங்கி வரும் ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் சார்பில் தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் பயிற்சி மையத்தின் நிறுவனர் அ.சி.தென்னரசு அழகேசன் தலைமையில் நடைபெற்றது இம்முகாமில் பயிற்சி மையத்தின் மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.
இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தொல்காப்பியன், தலைமை மருத்துவர் நிவேதா இரத்தவங்கி மருத்துவர்கள் ஹரிபாஸ்கரன், இந்துஜா, பயிற்சி மையத்தின் ஆசிரியர்கள் அ.சி.ஜெயபிரகாஷ், திருமலைவாசன், கனிமொழி தென்னரசு, தமிழரசன், சுரேஷ், கண்ணதாசன் மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி இரத்த வங்கி ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.

.jpeg)