இம்மிதிவண்டி பேரணியில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணாக்கர்களோடு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு வழியில் சென்ற மக்களிடம் மிதிவண்டி ஓட்டுவதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்தனர். இப்பேரணியில் பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் திரு வேலுத்தேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மிதிவண்டியில் செல்வதால் உடலுக்கு நன்மை உண்டாகும் மற்றும் மிதிவண்டியில் செல்வதால் பெட்ரோல் பயன்பாடு குறைவதோடு சுற்றுச்சூழல் பாதிப்படையாமல் தடுக்க முடியும் போன்ற கருத்துக்களை மாணாக்கர்களிடையே எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் அன்னார் மாணாக்கர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகக் கட்டாது எனவும், இணைய வழி விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடக் கூடாது எனவும் வலியுறுத்திப் பேசினார். இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் கோ, வெங்கடாசலம் நன்றியுரை கூறினார்.

