பாலக்கோடு தேமுதிக ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் 03 தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் தேசிய முற்போக்கு திராவிட கழக மாநில பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வருகையை முன்னிட்டு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் திரு.முனுசாமி, தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் மாநில அவை தலைவர் டாக்டர்.இளங்கோவன், தேமுதிக தருமபுரி மாவட்ட செயலாளர் திரு.விஜயசங்கர், தருமபுரி கிழக்கு மாவட்ட கவுன்சிலர் குமார், மாவட்ட அவை தலைவர் தங்கவேல் உதயகுமார், பொருளாளர் Dr.ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், பென்னகரம் சிவராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன், ஒன்றிய பொறுப்பாளர் பாடி சக்திவேல், ரங்கன், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பித்தனர்.
.gif)

