தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.6.72 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேட்டரி கார், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்கள்.
தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.6.72 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய பேட்டரி கார் இயக்கத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (04.06.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள், தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக புதிய பேட்டரி கார் இயக்கத்தினை ரிப்பன் வெட்டிதொடங்கி வைத்து அப்புதிய பேட்டரி காரில் பயணம் செய்து அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஒருகிணைந்த அவசரகால தாய், சேய் சிகிச்சை மையம் ஒருகிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் புதிய பேட்டரி காரினை மருத்துவர்களிடம் ஒப்படைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கே.அமுதவல்லி, தருமபுரி நகர் மன்றத் தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் மரு.டி.ஏ.சாந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.என்.சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவர். டாக்டர்.காந்தி உட்பட மருத்துவர்கள், செவலியர்கள் கலந்துகொண்டனர்.

