Type Here to Get Search Results !

"கைப்பேசியை விடு - புத்தகத்தை எடு" புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து தருமபுரி மாவட்டம், தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வருகின்ற 24.06.2022 வெள்ளிக்கிழமை முதல் 04.07.2022 திங்கட்கிழமை வரை 11 நாட்களுக்கு மாபெரும் புத்தக திருவிழாவினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்புத்தக திருவிழாவினை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்து தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் 03.06.2022 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்திட ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், தருமபுரி தகடூர் புத்தகப்பேரவை என்ற அமைப்பு பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து இந்த ஆண்டு தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வருகின்ற 24.06.2022 வெள்ளிக்கிழமை முதல் 04.07.2022 திங்கட்கிழமை வரை 11 நாட்களுக்கு மாபெரும் புத்தகத் திருவிழாவை மிகப்பெரிய அளவில், சிறப்பான முறையில் நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இம்மாபெரும் புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்பிக்க உள்ளார்கள். தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள இம்மாபெரும் புத்தகத் திருவிழா "கைபேசியை விடு புத்தகத்தை எடு" என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடத்தப்படுகின்றது. இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னணிப் பதிப்பாளர்கள், நூல் விற்பனையாளர்கள் பங்கேற்று இலக்கியம், வரலாறு, மானுடவியல், அரசியல், சூழலியல், நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பற்றிய புத்தகங்களும், சிறுவர்களுக்கான நூல்களும், முன்னணி எழுத்தாளர்களின் புனைவு இலக்கியங்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வேண்டிய நூல்களும், போட்டித் தேர்வுகளுக்கான நூல்களையும் இடம்பெற செய்ய உள்ளனர். இந்த ஆண்டு நடத்தப்படுகின்ற இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளைக் கொண்ட இலட்சக்காணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. 

இதில் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதணைகளை விளக்கிடும் வகையில் சிறப்பான கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்படுகின்றன, இப்புத்தக திருவிழாவில் நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை புத்தகக் கண்காட்சி, கடைகள் திறந்திருக்கும். நாள்தோறும் பகல் நேரத்தில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நடத்தும் கலந்துரையாடல்களும், இலக்கியக் கூட்டங்களும், மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

நாள்தோறும் மாலை 6.00 மணியிலிருந்து 8.00 மணி வரை தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள், பல்துறை ஆளுமைகள், அறிவுசார் சான்றோர்கள் ஆகியோரின் சொற்பொழிவு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன, இப்புத்தக திருவிழாவினை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர், மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், ஓவியப்போட்டிகள், கவிதைப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 

இதில் பங்கேற்று மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர், மாணவியர்களுக்கு பரிசுகளும், இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் புத்தகத் திருவிழாவில் வழங்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள இம்மாபெரும் புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு தருமபுரி வாசிக்கிறது என்னும் மாபெரும் வாசிப்பு திருவிழா தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசிக்கும் நிகழ்ச்சி 21.04.2022 அன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடத்தப்பட உள்ளது. மேலும் இப்புத்தகத் திருவிழாவில் 25.06.2022 அன்று பல்வேறு துறை சார்ந்த வள்ளுநர்கள், அறிஞர் பெருமக்கள், அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்று படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர், மாணவியர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் பல்வேறு போட்டி தேர்வுகள், வேலைவாய்ப்புகள், புதிய தொழில் வாய்ப்புகள் குறித்த வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடத்தப்படுகின்றது.

எனவே, அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்ககூடிய வகையில் நடைபெற உள்ள இம்மாபெரும் புத்தக திருவிழாவிற்கு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆன்றோர்கள், சான்றோர்கள், அறிவுசார் பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகம் உருவாக்கிடும் வகையில், அறிவுசார் புத்தகங்களை வாங்கி, படித்து பயன்பெறுவதற்கும், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திக்கொள்ளவும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து நடத்துகின்ற இம்மாபெரும் புத்தக திருவிழாவினை மிகச்சிறப்பாக நடத்திட அனைவரும் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்து அனைத்துப் பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி மாவட்டம், தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வருகின்ற 24.06.2022 வெள்ளிக்கிழமை முதல் 04.07.2022 திங்கட்கிழமை வரை 11 நாட்களுக்கு நடத்தப்பட உள்ள மாபெரும் புத்தக திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தை இன்று (04.06.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இக்கூட்டம் மற்றும் ஆய்வு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அண்ணாமலை, மாவட்ட முதன்னை கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், தருமபுரி நகராட்சி பொறியாளர் திரு.ஜெயசீலன், மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) திருமதி.தனலட்சுமி, தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு.இரா.செந்தில், தலைவர் திரு.சிசுபாலன், பொருளாளர் திரு.எம்.கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் திரு.தங்கமணி, பாரதி புத்தகாலயம் திரு.அறிவுடைநம்பி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies