அரூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட விடைத்தாள் திருத்தும் மையத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் நடத்தினர்.
தருமபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டதிற்கு உட்பட்ட விடைத்தாள் திருத்தும் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசரியர் கழகம் சார்பாக வாயிற்கூட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட தலைவர் பாரி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது 2009 ம் ஆண்டிற்கு பிறகு பதவியேற்ற ஆசரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை அரசு சரிசெய்ய வேண்டும். 2003ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தினார்.

