தருமபுாி அடுத்த இண்டூா் பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஆங்காங்கே பொிய அளவில் பேனா்கள் சாலை ஒரங்களிலும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி பேனா்கள் வைக்க கூடாது என தமிழக அரசின் உத்தரவை மீறும் வகையில் திமுக தொண்டா்கள் பேனா் வைத்துள்ளதால் பலத்த காற்று வீசும் போது சாலையில் செல்பவா்கள் மீது விழும் ஆபத்து உள்ளதால் உடனடியாக பேனா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

