தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் 7 திருமண ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர் சந்திப்பில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு பதிலாக டாஸ்மார்க் வளர்ந்து உள்ளதாகவும் அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் 10% முதல் 20% வரை கமிஷன் உயர்ந்துள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலை மூடல், கலவரம், மின்சாரம், சாலை வசதி, நியுட்ரினோ உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு, தொழில் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் விரைவில் பாஜக ஆட்சி வந்தால் மட்டுமே சாத்தியம் திராவிடம் இல்லாத வளமான தமிழகம், வலிமையான பாரதத்தை உருவாக்குவதே எங்கள் இலட்சியம் என தெரிவித்தார்.

