தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பேரூராட்சி அலுவலகம் மற்றும் நான்கு ரோட்டில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் இன்பசேகரன் முன்னிலை வகித்தது மாரண்டஹள்ளி நான்கு ரோட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி,கழக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
