நத்தமேடு அடுத்த மோட்டாங்குறிச்சியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் பழனிச்சாமி, பழனிச்சாமியை குடும்ப பிரச்சனையின் காரணமாக மூன்று நாட்களுக்கு முன்பு அவருடைய மனைவி பழனியம்மாள், பழனியம்மாளின் தம்பி நாகராஜ் மற்றும் மருமகன் பரசுராமன் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இது குறித்து பழனிசாமி பொம்மிடி -நடூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மேலும் தாக்குதலில் காயமடைந்த பழனிசாமி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
அவருக்கு வயிற்றில் ஏற்கனவே பாதிப்பு இருந்ததால் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் தற்போது தூக்கிட்டு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

