தர்மபுரி நகரிலிருந்து சேலம் செல்லும் முக்கிய சாலையாக நேதாஜி பைபாஸ் சாலை உள்ளது, இந்த சாலையில் முக்கிய அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளது, இத சாலையை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 24 மணி நேரமும் போக்குவரத்து இருக்கும் மிக முக்கிய சாலையாக இது இருந்து வருகிறது.
இந்த சாலையில் பயணிகளின் வசதிக்காக சாலைக்கு நடுவே மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது, கடந்த சில நாட்களாக இலக்கியம்பட்டி பகுதியில் செல்லும் சாலை நடுவே உள்ள சென்டர் மீடியா மின் விளக்கு எரியாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளும், அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர், நகர பகுதி என்பதால் அந்த பகுதியில் விபத்துகள் அதிகமாக ஏற்படுகிறது இதனால் உடனடியாக மின் விளக்கே சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


