Type Here to Get Search Results !

தீர்த்தமலை சாலை ஆக்கிரமிப்பு, கண்டுகொள்ளாத அதிகாரிகள், கூடலூர் கிராம மக்கள் கவலை.

அரூர் அருகே வீரப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூடலூர் கிராமத்தில் விவசாயத்தை மட்டும் நம்பி 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.ஈட்டியம்பட்டி பிரிவு சாலையில் இருந்து பூ நகர், அண்ணா நகர் வழியாக தீர்த்தமலைக்கு செல்லும்  தார் சாலையில் இந்த கிராம  விவசாய நிலத்தில்  விளையும்  பொருட்கள் மற்றும் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.

தீர்த்தமலைக்கு குறுக்குச்சாலை என்பதால் தினந்தோறும் பைக், காரிலும் பலர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனிப்பட்ட சிலரது சொந்த பிரச்சனை காரணமாக சாலையின் நடுவே கல்லும், முள்ளும் போட்டு சாலையை மறித்து உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட  கிராம மக்கள் கூறுகையில் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. விவசாய பொருட்களை எடுத்து செல்ல முடியவில்லை, 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு  குழந்தைகள் சிரமப்பட்டனர்.

தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் குழந்தைகள் படித்து வருகின்றனர் வரும் திங்கட்கிழமை பள்ளி திறக்க உள்ள நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றாமல் இருந்தாள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில் தொடர்ந்து சிரமம் ஏற்படும்.தீர்த்தமலைக்கு செல்லும் இந்த குறுக்குச் சாலையில் தினந்தோறும்  காரில் வந்து ஏமாற்றத்துடன் பலர் திரும்பி செல்கின்றனர். 

சாலை ஆக்கிரமிப்பு பகுதியை பார்வையிட வரும் அதிகாரிகள் பார்வையிட்டு திரும்பிச் செல்வது எங்களுக்கு கவலையாக உள்ளது எனவே அரசு உடனடியாக சாலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies