தர்மபுரி மாவட்டம் ஏஐடியூசி அமைப்பின் சார்பாக மாநில தழுவிய மாபெரும் தர்ணா ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது கொசு ஒழிப்பு பணியாளர்கள், மற்றும் தர்மபுரி மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து பொது பணியாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, OHT இயக்குபவர்கள் தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், ஆகியோர் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
- முக்கிய கோரிக்கையாக கிராமங்களில் கொசுப்புழு ஒழிப்பு பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் நிரந்தர பணி வழங்க வேண்டும்,
- கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்,
- உள்ளாட்சி பணியாளர்களுக்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும், போன்ற எண்ணற்ற கோரிக்கைகள் முன் நிறுத்தப்பட்டது.
இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பொது பணியாளர்கள் சங்கம் R.இராமமூர்த்தி, தர்மபுரி மாவட்ட தலைவர் உள்ளாட்சி பணியாளர் N. மனோகரன், மாநில செயலாளர் தமிழ்நாடு AITUC அமைப்பின் இராதாகிருஷ்ணன், தோழர் மாவட்ட பொது செயலாளர் கே.மணி AITUC தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவமனைகளில் பணியாற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் தர்மபுரி, இராமியணஹள்ளி, சிந்தல்பாடி, கடத்தூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், காரிமங்கலம், ஆகிய அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர், சின்னப்பையன், ஆனந்தி, சந்திரன், மாது, வனிதா, மணிகண்டன், பிரபாகரன், போன்ற கொசு ஒழிப்பு பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
.gif)

