உலகம் முழுவதும் இன்று யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மாரண்டஅள்ளி பேரூராட்சி பணியாளர்கள் செய்த யோகா பயிற்சியின் போது பஞ்சப்பள்ளி யோகா மற்றும் இயற்கை மருத்துவர். பிருத்திவிராஜ், யோகா பயிற்றுனர் சரவணன் துரை மற்றும் வெங்கடேஸ்வரி ஆகியோர் இணைந்து பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் அனைவருக்கும் யோகா பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி செயல்அலுவலர் சித்திரைக்கனி, பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் பேரூராட்சி துணை தலைவர் கார்த்திகா, கவுன்சிலர்கள் காரத்திகேயன், யதிந்தர், விசுவநாதன், சிவக்குமார், வெங்கடேசன், கோவிந்தன், அபிராமி, ரீனா, கீதா, லட்சுமி, புவனேஸ்வரி, சுகந்தி, அனிதா, இளநிலை உதவியாளர்கள் தங்கராஜ், சபரி துப்புரவு மேற்பார்வையாளர் தேன்மொழி மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.
.gif)

