தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லில் இன்று காலை மீனவர் ஒருவர் மணல்திட்டு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது பெண் சடலம் ஒன்று மிதந்தது அவர் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் தர்மபுரி நெல்லி நகர் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரியங்கா (22) என தெரிய வந்தது இவர் அரசு கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும் இவர் கடந்த 2 நாட்களாக காணாமல் போனதும் தெரியவந்தது.
சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காதல் தோல்வி தானா இல்லை வேறு ஏதாவது காரணமா என காவல்துறை விசாரணை பல்வேறு கோணங்களில் நடத்தி வருகின்றனர்.

