தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மொரப்பூரில் சுமார் 1000த்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், மொரப்பூர் பேருந்து நிலையத்தியத்தை சுற்றி பல்வேறு கடைகள் உள்ளன, மேலும் மொரப்பூரிலிருந்து தாசிரஹள்ளி செல்லும் வழிசாலை, ரயில்நிலையம் செல்லும் வழி சாலை அரூரிலிருந்து தருமபுரி செல்லும் சாலை உள்ளிட்ட சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை துப்பரவு பணியார்கள் கடந்த 25 நாட்களாக அப்புறபடுத்தாமல் உள்ளனர்.
இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது மேலும் குப்பைகளை அகற்ற கோரி அதிகாரளிடத்தில் இன்று வரை எவ்வித நடவடிக்கை இல்லை ஆகையால் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


