அரூர் அருகே உள்ள நரிப்பள்ளியில் ஸ்ரீசேலத்துமாரியம்மன் கோயில் கும்பாஷேக விழா கடந்த 15ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது இதையடுத்து சுவாமிக்கு கரிக்கோல் உற்சவம் சக்திஅழைத்தல் தீர்த்தக்குடம் அழைத்தல் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
மங்களஇசையுடன் கணபதி பூஜை வாஸ்து சாந்தி விமான கலச பிரதிஷ்டையும் சுவாமியை பீடத்தில் அமர்த்துதல் இரண்டாம் யாகசாலை பூஜையும் ஸ்ரீசேலத்து மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் மிகவும் வெகு விமர்சியாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் எம்எல்ஏ வே.சம்பத்குமார் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் பாபு (எ) அறிவழகன், கோயில் நிர்வாகிகள் ஆ.சிற்றரசு, ஊர் முக்கியஸ்தர் முருகன், ஊர்செட்டி தாளமுத்து, தர்மகர்த்தா சுசேந்திரன், கோவிந்தன், ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன், ஊர் கவுண்டர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

