![]() |
| மாதிரி படம். |
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் கடும் வெயிலை சமாளிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை பென்னாகரம், ஒகேனக்கல், தாசம்பட்டி, சின்னம்பள்ளி, ஏரியூர், நெருப்பூர், நாகமரை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகள், தாழ்வான குடியிருப்புகள், வயல்வெளிகள், நீர்நிலைகளில் மழைநீர் தேங்கியது.
மழைப் பொழிவின் போது திடீரென வீசிய சூறைக் காற்றினால் பென்னாகரம் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்பட்டது. பென்னாகரம் பகுதியில் திடீரென பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பென்னாகரத்தில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது.

