இணைந்த கரங்கள் என்ற சமூக அமைப்பின் சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு மாங்கரையில் நடைபெற்றது. தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளியின்ன தற்காப்பு கலைகளோடு நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்விற்கு மாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் தலைமை வகித்தார்.
பின்னர் ரங்கன் கராத்தே மாஸ்டர் தலைமையில் கராத்தே நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவர் முனிராஜ் , ராகவேந்திரா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் நஞ்சப்பன், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி பென்னாகரம் நகர செயலாளர் ஜீவா, மற்றும் தகடூர் குரல் பென்னாகரம் செய்தியாளர் எம் பிரேம்குமார், மற்றும்
இணைந்த கரங்கள் அமைப்பைச் சார்ந்த மாரிமுத்து மற்றும் அதன் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

.jpeg)