Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 2022-ஆம் ஆண்டிற்கான நேர்காணல் ஜுலை, ஆகஸ்ட், மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது மேலும், வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே நேர்காணல் செய்யும் முறைகளுடன் இல்லம் தேடி நேர்காணல் செய்யும் திட்டமும் தமிழ்நாடு அரசால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு, அஞ்சல் ஊழியர்கள் வாயிலாக இச்சேவை அளிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நேர்காணல் செய்யும் ஓய்வூதியதாரர்கள் தங்கல் சொந்த செலவில் அஞ்சல் துறையிடம் தலா ரூ.70/- செலுத்தி ஓய்வூதியதாரர்கள் / வீட்டில் இருந்தவாறே நேர்காணல் செய்து கொள்ளலாம் எனவே, தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இவ்வாண்டிற்கான நேர்காணில் பங்கேற்று உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டுகளில் ஏப்ரல், மே, மற்றும் ஜீன் ஆகிய மாதங்களில் ஓய்வூதியம் பெற்று வழங்கும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல், இவ்வாண்டு 2022 முதல் ஜுலை, ஆகஸ்ட், மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது, (கொரோனா பெருந்தொற்று காரணணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே நேர்காணல் செய்யும் முறைகளுடன் இல்லம் தேடி நேர்காணல் செய்யும் திட்டமும் தமிழக அரசால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு, அஞ்சல் ஊழியர்கள் வாயிலாக இச்சேவை அளிக்கப்படவுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் நேர்காணல் செய்யும் ஓய்வூதியதாரர்கள் தங்கல் சொந்த செலவில் அஞ்சல் துறையிடம் தலா ரூ.70/- செலுத்தி ஓய்வூதியதாரர்கள் / வீட்டில் இருந்தவாறே நேர்காணல் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றினை கீழ்கண்ட ஏதேனுமொரு வழியில் சமர்ப்பித்து பயன்பெற தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

நேரடியாக தொடர்புடைய கருவூலங்களுக்கு வருகைதந்து கடந்த காலங்களில் பின்பற்றி வந்த முறைப்படி நேர்காணல் செய்து கொள்ளலாம். இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி சமர்ப்பிக்கலாம். பயோ மெட்ரிக் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி சமர்ப்பிக்கலாம். பயோ மெட்ரிக் கருவி உதவியுடன் ஜீவன் பிரமாண் வாயிலாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றினை ஓய்வூதிய சங்கங்கள் மூலமாக சமர்ப்பிக்கலாம். அஞ்சல்துறை வாயிலாக இல்லத்திலிருந்தவாறே சமர்ப்பிக்கலாம்.

நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  1. ஓய்வூதியக் கொடுவை (Pension Payment Order)
  2. ஆதார் அடையாள அட்டை (Aadhar Card)
  3. மறுமணம் புரியாமைக்கானச் சான்று (Non Re-Marriage Certificate) (குடும்ப ஓய்வூதியர்களுக்கு)
  4. பணிபுரியாச் சான்று (Non Re-Employment Certificate)

எனவே, தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இவ்வாண்டு 2022 முதல் ஜூலை, ஆகஸ்ட், மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ள நேர்காணில் பங்கேற்று மேற்குறிப்பிட்டுள்ளவாறு ஏதேனுமொரு வழியில் உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்குமாறும் மற்றும் இந்நேர்காணலில் மேற்குறிப்பிட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies