Type Here to Get Search Results !

தருமபுரி வாசிக்கிறது என்னும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்

தருமபுரி மாவட்டத்தில் "கைப்பேசியை விடு - புத்தகத்தை எடு" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வருகின்ற 24.06.2022 முதல் 04.07.2022 வரை 11 நாட்கள் தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தருமபுரி வாசிக்கிறது என்னும் மாபெரும் வாசிப்பு திருவிழாவினை தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகடாமியின் பால புரஸ்கார் விருது பெற்ற மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற நூலினை மாணவியர்களுக்கு இன்று வழங்கி, இப்புத்தகத்தினை வாசித்து தருமபுரி வாசிக்கிறது என்னும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்கள்.

தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து தருமபுரி மாவட்டம், தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வருகின்ற 24.06.2022 வெள்ளிக்கிழமை முதல் 04.07.2022 திங்கட்கிழமை வரை 11 நாட்களுக்கு மாபெரும் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. 

இதனை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தருமபுரி வாசிக்கிறது என்னும் மாபெரும் வாசிப்பு திருவிழா இன்று (21.06.2022) நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற தருமபுரி வாசிக்கிறது என்னும் மாபெரும் வாசிப்பு திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகடாமியின் பால புரஸ்கார் விருது பெற்ற மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற நூலினை மாணவியர்களுக்கு இன்று வழங்கி, இப்புத்தகத்தினை வாசித்து தருமபுரி வாசிக்கிறது என்னும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற தருமபுரி வாசிக்கிறது என்னும் மாபெரும் வாசிப்பு திருவிழாவில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன். காரணம், நான் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற பிறகு அரசுப்பள்ளியில் நடைபெறுகின்ற இச்சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவ செல்வங்களை சந்தித்து, தருமபுரி வாசிக்கிறது என்ற நிகழ்வினை தொடங்கி வைத்து, மாணவியர்களுக்கு வாசிக்கும் பழக்கமும் தொடர்ந்து ஏற்பட்டிட இந்த நிகழ்வு அமையும் என்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. 

இங்கு படிக்கும் மாணவியர்கள் மட்டுமல்லாமது தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள மாணவ, மாணவியர்கள் சிறந்த கல்வியை கற்று, சிறப்பான உயர்ந்த நிலையினை அடைந்திட வேண்டும். அவ்வாறு உயர்ந்த கல்வியை கற்று, உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்ற தன்னம்பிக்கையினை பள்ளிகளில் படிக்கும் பருவத்திலேயே நீங்கள் மனதில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இளமையில் கற்ற கல்வி எப்பொழுதும் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இங்கு படிக்கும் மாணவிகள் எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளான இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட ஏராளமான உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும். 

அந்த பதவிகளில் இருக்கும் பொழுது இது நான் படித்த பள்ளி என்ற பெருமை கொள்ளும் அளவிற்கு உங்கள் கல்வி தற்பொழுது கற்கும் கல்வி சிறந்த கல்வியாக அமைய வேண்டும். சிறந்த கல்வியை கற்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், தருமபுரி தகடூர் புத்தகப்பேரவை என்ற அமைப்பு பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வருகின்ற 24.06.2022 வெள்ளிக்கிழமை முதல் 04.07.2022 திங்கட்கிழமை வரை 11 நாட்களுக்கு மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை நினைவு கூறும் வகையிலும், அனைத்து மாணவ, மாணவியர்களும் வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இம்மாபெரும் வாசிப்பு திருவிழா தருமபுரி மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட 1610-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 1.87 இலட்சம் மாணவி, மாணவியர்கள் இன்று நடைபெற்ற தருமபுரி வாசிக்கிறது என்னும் வாசிப்பு திருவிழாவில் கலந்துகொண்டு புத்தகத்தினை வாசித்து மகிழ்ந்தனர். மேலும், தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற தருமபுரி வாசிக்கிறது என்னும் மாபெரும் வாசிப்பு திருவிழாவில் 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகடாமியின் பால புரஸ்கார் விருது பெற்ற மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற நூல் 2000 மாணவியர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தருமபுரி வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன், தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு.இரா.செந்தில், தலைவர் திரு.சிசுபாலன், பொருளாளர் திரு.எம்.கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் திரு.தங்கமணி, பொறுப்பாளர்கள் திரு.ராஜசேகரன், திருமதி.ரேணுகா தேவி, பாரதி புத்தகாலயம் திரு.அறிவுடைநம்பி, 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகடாமியின் பால புரஸ்கார் விருது பெற்ற மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூல் ஆசிரியர் யெஸ்.பாலபாரதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies