தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் பொதுபணி துறைக்கு சொந்தமான வாணியாறு கால்வாயை கடந்து தான் செல்லவேண்டும் மழைக்காலங்களில்
கால்வாயில் தண்ணீர் சென்றால் மிகவும் ஆற்றை கடக்க முடியாமல் மிகவும் சிரமமாகிறது இந்நிலையில் தங்கள் பகுதிக்கு சிறு பாலம் கட்டி தரவேண்டும் என அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.அதன்படி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் இன்று எலப்புடையாம்பட்டியில் சிறு பாலம் அமைக்க பூமி பூஜை செய்து அப்பணியை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆர்ஆர் பசுபதி ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் ,துணை தலைவர் ராஜேஸ்வரி அழகேசன் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்சிவன் எல்லப்புடையாம்பட்டி இராமஜெயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

