தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி துவங்கியது தர்மபுரி சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, ஓய்வுதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 249 மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்கினர். இதில் அரூர் வட்டாட்சியர் கனிமொழி மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

