பதவியின் பெயர் : வாகன சீராளர் (Van cleaner)
ஊதிய விகிதம் : நிலை -1 (ரூ.15700 /-- 50000/-)
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 1(ஒன்று)
இன சுழற்சி முறை : ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்)
பணியமர்த்தப்படும் இடம் : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி மாவட்டம்.
மேலும் பிற விவரங்களை https://dharmapuri.nic.in/ என்ற தருமபுரி மாவட்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளுமாறும், விண்ணப்ப படிவத்தினை மேற்கண்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து முழு விவரங்களுடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை 16.06.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகுதி:-
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வாகனங்களை சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
- நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.
- 01.07.2021 அன்றுள்ளவாறு 18 முதல் 37 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் (OC-32, BC & MBC - 34, SC & ST -37).
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தருமபுரி மாவட்டம்-636705
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மற்றும் நேரம்.
16.06.2022 (வியாழக்கிழமை) மாலை 5.00 மணி

