கடத்தூர் - பொம்மிடி சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் வாகனங்களில் நிரப்பபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது, உடனடியாக வாகன ஒட்டிகள் பிளாஸ்டிக் பாட்டிலில் அந்த பங்கில் பெட்ரோல் பிடித்து பார்த்ததில் அதில் அடிப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்தது தெரியவந்தது உடனடியாக வாகன ஓட்டிகள் பங்க் உரிமையாளரிடம் வண்டிகளில் இது போல் தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பினால் வாகனம் பழுது ஏற்பட்டுவாகனத்தின் ஆயுள் காலாவதி ஆகிவிடும், எங்களுக்கு ஒரு அவசர காலத்தில் வாகனம் பழுது ஏற்பட்டால் இந்த நிறுவனம் பொறுப்பேற்குமா? இந்த பங்கின் மீது எங்களுக்கு நம்பிக்கை இழப்பு ஏற்படும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பங்கின் உரிமையாளர் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பெட்ரோல் டேங்கில் தண்ணீர் கலந்து விட்டது. அதனை கண்டுபிடித்த பிறகு பெட்ரோல் விற்பனையை நிறுத்தினோம். இங்கு தண்ணீர் கலந்த பெட்ரோல் நிறப்பியதால் உங்கள் வாகனம் பழுது ஏற்பட்டால் அதை நாங்களே பழுது பார்த்து கொடுக்கிறோம் என உறுதியலித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர், இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

