பல ஆண்டுகளாக தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் ராஜா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதேபோன்று அரூர் 6 வது வார்டை சார்ந்த ஆனந்தராஜ், இந்துமதிக்கு திருமணம் நடைபெற்று இந்த தம்பதியினருக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஆனாலும் ஆனந்தராஜ் மறுமணம் செய்துகொள்ளவில்லை.
இந்நிலையில் கோவிந்தன் உயிரோடு இருக்கும் பொழுதே அவருக்கு சொந்தமான 5 குடியிருப்பு வீடுகளில், 4 வீடுகளில் ஒன்றை கணவனை பிரிந்து வாழும் கிருஷ்ணம்மாளுக்கு தானமாக எழுதி கொடுத்தாராம், மீதமுள்ள 4 வீடுகளில் ஒன்றை மற்றொரு பெண்ணான இந்துமதிக்கும், ஒன்றும், இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு வீடு எழுதி கொடுத்தாராம், மீதமுள்ள ஒரு அவரது மனைவி மணியம்மைக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் வாய் பேச முடியாத காது கேட்காத வெங்கட்ராமன் அவரது மனைவி மகாலட்சுமி, தம்பதியரின் 2 பெண் குழந்தைகளில் சிவரஞ்சனி மனவளர்ச்சி குன்றியவர். மற்றொரு பெண் நித்தியஸ்ரீ மட்டுமே நல்ல நிலையில் உள்ளார். என் குடும்பத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்ளோம். எனது அம்மா குடியிருந்து வரும் வீட்டை அவருக்குப் பிறகு என் பிள்ளைக்கு வழங்க வேண்டும் என போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை இல்லாததால் நேற்று அரூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு வெயிலில் குடும்பத்துடன் சாலையில் வெங்கட்ராமன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் அழைத்துச் சென்ற விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனில் இருந்த வெங்கட்ராமனின் தாயார் மணியம்மைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை அரூர் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

