தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சோமனஅள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் நானூறு மாணவ, மாணவிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால் பேரவை விதி 110 ன் கீழ் தொடங்கி வைக்கப்பட்டது.
தற்போது ஆங்கில வழிக் கல்வியும் ஆறாம் வகுப்பு முதல் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதற்க்கும் புதிய கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். புதிதாக தொடங்கப்பட்ட பள்ளிக்கு அடிப்படை வசதிகளான தரமான விளையாட்டு மைதானம், சுற்றுசுவர், மிதி வண்டிகள் நிறுத்துமிடம், மதிய உணவு சமையல் கூடம் வசதிகள் மிக அவசியமாக செய்து தர வேண்டும்.
பெங்களூர் மைன்ட்ரீ மென்பொருள் நிறுவனத்தின் உதவியுடன் 25 கணிப்பொறி ஆய்வகம் 10 கணிப்பொறியுடன் கணிணி மின் நூலகம் நிறுவப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்க்கு ஒரு மாதத்திற்கு முன் மின் அஞ்சல் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

