தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு எட்டு கிலோமீட்டர் பாதை அமைக்க 13 பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு தர்மபுரி மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் தகவல்.
தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு இன்னும் பணி தொடங்கவில்லை. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் DNV செந்தில்குமார் பலமுறை மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரிய தலைவரை சந்தித்து ரயில்பாதை அமைக்கும் பணியை தொடங்க கோரிக்கை மனுக்களை அளித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக தருமபுரி மொரப்பூர் ரயில் பாதை அமைப்பு திட்டத்திற்கு ரயில்வே துறைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணையின்படி எட்டு கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்த உள்ளது. இப்பணிக்காக சிறப்பு வட்டாட்சியர். வருவாய் ஆய்வாளர்கள். நில அளவைகள் உள்ளிட்ட 13 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு ஆட்கள் நியமனம் நடைபெற உள்ளது. தர்மபுரி நகரப் பகுதிகளுக்கு எட்டு கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணிக்கு பணியாளர்கள் செயல்படுவார்கள். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

