Type Here to Get Search Results !

லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேரோட்டம்.

லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேரோட்டம் இரண்டு ஆண் டுகளுக்குப் பின் நடைபெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மசுவாமி தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சிக்கு உட்பட்ட  அளேபுரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்        துறையின் கீழ் செயல்பட்டு வரும் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சாமி கோயில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் வைகாசி பௌர் ணமி அன்று தேர்த் திருவிழா நடைபெ பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மசாமி கோயில் அமைந்துள்ளது. கரோனா தொற்று பர வல் காரணமாக கடந்த 2 ஆண்டுக ளாக தேர்த் திருவிழா நடைபெறவில்லை.

இந்தநிலையில் நிகழாண்டிற்கான திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட       வாகனங்களில் நாள்தோறும் உற்சவம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயிலின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி அலங்கரித்து வைக்கப்பட்ட நிலையில், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜி.கே. மணி, சார் ஆட்சியர் சித்ரா விஜயன், வட்டாட்சி யர் அசோக்குமார், அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் கட்டளைதாரர் கள் நிர்வாகத்தினர் மற்றும் பல்லாயி ரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது பக்தர்கள் தேரின் மீது தானியங்களை வீசியும், கைகளைத் தட்டியவாறு கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு தேரை இழுத்துச் சென்றனர். மேலும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் காவல் தலைமையில் பென்னாகரம் துணை கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன், ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies