தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அனைத்து தெரு வீடுகளுக்கும் புதிய குடிநீர் தண்ணீர் குழாய் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆதலால் நகர் முழுவதும் சாலைகள் ஆங்ககே பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதற்கிடையே கனரக வாகனங்கள் பேருந்துகளை இவ்வழியாக செல்வதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் மற்றும் அதிக அளவில் காற்று மாசு ஏற்படுகிறது. போக்குவரத்து கூட்ட நெரிசல் ஏற்படுகிறது
தண்ணீர் குழாய் அமைக்கும் பணி முடியும் வரை கனரக சரக்கு வாகனங்கள் பேருந்துகளை புறவழிச்சாலையில் மட்டும் செல்ல அனுமதிக்க வேண்டும் மேலும் இப்பணி முடியும் வரை நகருக்குள் கனரக வாகனங்கள் வர பேருந்து நகருக்குள் வர மறுக்கப்பட வேண்டும்.
மேலும் இப்பணி விரைவில் முடித்துவிட்டு குண்டும் குழியுமாக உள்ள சாலையை விரைவில் புதுப்பித்து தருமாறு சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்களின் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

