இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில் இந்தப் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் ஆலங்கட்டி உடன் கனமழை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 300 ஏக்கர் விவசாய நிலத்தில் சாகுபடி செய்திருந்த பருத்தி தோட்டத்தில் ஆலங்கட்டி விழுந்ததால் செடியில் இருந்த பருத்தி காய் கீழே விழுந்து சேதமானது. பச்சை நிறத்தில் காணப்பட்ட செடியின் இலைகள் கலர் மாறி காய்தல் கருகத் தொடங்கி தொடங்கிவிட்டது. ஒவ்வொரு விவசாயியும் ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் செலவு செய்துள்ளோம். மீதமுள்ள பருத்திச் செடிகளில் விளைச்சல் தரும் என்று எங்களுக்கு தெரியவில்லை.
அதேபோன்று சுமார் 100 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் செடியின் நுனி மற்றும் இலைகள் விவசாய நிலத்தில் விழுந்துள்ளது. நிலத்தின் விளைந்துள்ள மரவள்ளி கிழங்கு விளைச்சல் தருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு, பருத்தி விவசாய நிலத்தில் விவசாய துறை அதிகாரிகள் மூலம் நேரில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

.jpeg)