மேலும் அந்த கட்டிடத்தை சுற்றி முட்புதர்கள் மண்டி கிடக்கின்றது, அதற்கு ஒருபடி மேலேபோய் புதர்கள் கட்டிடத்தின் ஜன்னல் வழியே உள்ளேயும் சென்றுள்ளது, விச ஜந்துக்கள் அதிகம் சுற்றித்திரிவதால், அங்கு சிகிச்சை பெரும் குழந்தைகள் நலன் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த காட்டிடத்தில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது, எனவே மேலும் சுவர்கள் பழுதடைந்து உள்ளதாலும் சுற்றிலும் புதர்கள் மண்டி கிடைப்பதாலும் தாய்மார்கள் ஒருவித பயத்துடனே சிகிச்சைக்கு வருகின்றனர், இதனை நன்கு அறிந்தும், அதை கண்டுகொள்ளாத ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் உள்ளனர், எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக செடிகளை அகற்றி, பழுதான சுவரை சரி செய்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், மேலும் மருத்துவமனை பராமரிக்க மாதாந்திர நிதி ஒதுக்கியும் முறையாக பராமரிப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

