இந்த விழா நேற்று பெரியாம்பட்டி ஊரிலிருந்து பெரிய பூலாம்பட்டி வரை 1.கிலோ மீட்டர் வரை நடந்து சென்று மேளதாளங்கள் முழங்க காவடி ஆட்டம் கரகாட்டம் குத்தாட்டம் போட்டுக்கொண்டு பக்த கோடி பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வெயிலையும் பொருட்படுத்தாமல் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், வேத பாராயணம், பூர்ணாஹநிதி நடந்தது. இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை யாக பண்டிதர்கள் மற்றும் ஊர் கவுண்டர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஶ்ரீ பச்சையம்மன் காத்தவராயன் வீரபத்திரன் காமாட்சி மீனாட்சி முனீஸ்வரன் சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள், பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 50 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஊர் பொதுமக்கள், விழாகுழுவினர் செய்திருந்தனர்.