Type Here to Get Search Results !

ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள பள்ளிபட்டி பஞ்சாயத்து காரியப்பர் அள்ளி குப்பன் கொண்டார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில்கலூக்கு  திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 5-ஆம் தேதி மங்கள இசை முழங்க கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது. 

இதனை தொடர்ந்து கணபதி, லட்சுமி, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள்  நடைபெற்றது. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. 

பின்னர் காலை 9 மணிக்குமேல் 10. மணிக்குள் ஸ்ரீ  விநாயகர் மற்றும் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் விமான கோபுர கலசம் மற்றும் மூலவர், பரிகார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை  வெகுவிமர்சியாக நடத்தி வைத்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் காரியப்பர் அள்ளி குப்பன் கொட்டாய் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies