அரூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நகரப்பகுதி மற்றும். சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி காம்பவுண்டு சுவரை ஒட்டி தொட்டம்பட்டி செல்லும் சாலையில் உள்ள இறைச்சி கடையின் அருகில் சில நபர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து மது அருந்தி வருகின்றனர்.
போதை தலைக்கேறிய பிறகு சிலர் ரோட்டில் நடந்து செல்லும் அப்பகுதி குடியிருப்பு பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவிகள் கிண்டல் செய்து வருவதால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதியில் குடி இருப்பவர்களும், மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

