இதுகுறித்து ஓட்டுனர் கார்த்திக்கிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் கார்த்திக்கிடம் எந்த தகவலும் காவல்துறையினரால் பெற முடியவில்லை இதனால் கடத்தலுக்கு உதவியாக இருந்த ஓட்டுனர் கார்த்திகை கடந்த 31 ஆம் தேதி அன்று போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அகை்கப்பட்டனர்.
சேலம், ஏற்காடு, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டுநர் அஜித்தை தேடிவந்த நிலையில் பெங்களூருவில் அரூர் உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரால் பிடிக்கப்பட்டு அஜித்திடம் இருந்த மாணவியை மீட்டு அரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் ஓட்டுநர் அஜித், ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்துள்ள நிலையில் இவருக்கு குழந்தைகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓட்டுநரை கைது செய்து எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், பெண் குழந்தைகள் கடத்தல் மற்றும் போக்சோ ஆகிய மூன்று சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அரூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. எனவே பள்ளி மாணவிகள் மீது மாவட்ட நிர்வாகம் தனி அக்கறை கொண்டு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதேபோல் பெற்றோர்களும் தங்களின் குழைந்தைகள் மீது கவணம் செலுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

