![]() |
| மாதிரி படம். |
கழிவு செய்யப்பட்ட வாகனம் வருகின்ற 22.06.2022 புதன்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணியளவில் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது. மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என பென்னாகரம் பட்டுவளர்ச்சித்துறை, உதவி இயக்குநர் (பொ) முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக ஈப்பு வாகன எண்.TN 09 BG 2345 Bolero LX என்ற வாகனம் கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட இவ்வாகனத்தை வருகின்ற 24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று மாலை 03.00 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.
மேற்படி பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

