தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 380 தலித் கிறிஸ்தவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்கு உறுப்பினர்களாக உள்ள தலித் கிறிஸ்துவ மக்கள் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்கின்றனர்.
மேலும் சிதறிக் கிடக்கும் தலித் கிறிஸ்தவ மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஓர் இடத்தில் வீடு கட்டும் திட்டம், ஆலயத்தின் மூலம் பங்கு மக்களின் பிள்ளைகளுக்கு வழங்கிவந்த கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் இலவசமாக தொடர்ந்து கிடைக்கவும்,வேண்டும் அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் பங்கு மக்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அனைத்து கட்டடத்தின் வருவாயும் பங்கு தந்தை மற்றும் பங்கு பேரவை தலைவர் மற்றும் செயலர் மூலம் வரவு செலவு கணக்கு பார்க்க வேண்டும் எனவும் லயோலா கல்வி நிறுவனம் வருவதற்கு முன் தங்களுக்கு அனைத்து அடிப்படை உரிமைகள் கிடைத்தன ஆனால் தற்போது அந்த உரிமைகளும் வழங்கப்படவில்லை எனவும் தாங்கள் தலித் கிறிஸ்தவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுகின்றன என குற்றம் சாட்டை முன்வைத்து இன்று அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் 50க்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவ மக்கள் இரண்டு மணி நேரத்திள்கு மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

