பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக தர்மபுரி மனவளக்கலை மன்றத்துடன் இணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு கருத்தரங்கம் '"யோகாவும் நிறைவான வாழ்வும்" என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் தர்மபுரி மனவளக்கலை மன்ற யோகா பேராசிரியரும் தர்மபுரி கம்பன் கழக செயலாளரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான திரு கா. குமரவேல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகாவும் நிறைவான வாழ்வும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இவர் தனது உரையில் யோகாவை பின்பற்றி தியான வாழ்வை வாழ்ந்தோமானால் எவ்வாறு மகிழ்வோடும் ஆரோக்கியத்தோடும் நெடுங்காலம் வாழலாம் என்பதை எளிமையாக எடுத்துரைத்தார். தொடர்ந்து ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரும் மனவளக்கலை பேராசிரியருமான திரு. வெங்கடேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னதாக பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார்.
வேளாண்மை துறை இணைப்பேராசிரிரும் துறைத் தலைவருமான முனைவர். கார்த்திகேயன் அவர்கள் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வுக்கு வருகை புரிந்த அனைவரையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் ஆங்கிலத்துறை தலைவருமான முனைவர். கோவிந்தராஜ் அவர்கள் வரவேற்றுப் பேசினார். இறுதியாக நாட்டு நலப்பணித்திட்டம் மாணவி செல்வி. மீனாட்சி நன்றி உரையாற்றினார். நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்களும் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணாக்கர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சமீர், தமிழ்ச்செல்வன், முத்தரசு மற்றும் செல்வி. ஞானசவுந்தரி ஆகியோர் செய்திருந்தனர்.
.gif)

